திருப்பூர் சிக்கண்ணா அரசுக் கல்லூரியில் நாளை இறுதிகட்ட கலந்தாய்வு

திருப்பூர் சிக்கண்ணா அரசுக் கல்லூரியில்  நாளை இறுதிகட்ட கலந்தாய்வு
X

Tirupur news- சிக்கண்ணா அரசுக் கல்லூரி இளநிலை பட்ட வகுப்புகளுக்கு நாளை இறுதிகட்ட கலந்தாய்வு ( கோப்பு படம்)

Tirupur news- திருப்பூர் சிக்கண்ணா அரசுக் கல்லூரி இளநிலை பட்ட வகுப்புகளுக்கு நாளை ( 12ம் தேதி) இறுதிகட்ட கலந்தாய்வு நடக்க உள்ளது.

Tirupur news, Tirupur news today- அரசு கலைக்கல்லூரி இளநிலை பட்ட வகுப்புகளுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 12) நடைபெறுகிறது.

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி இளநிலை பட்ட வகுப்புகளுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு நாளை திங்கள்கிழமை (ஆகஸ்ட் 12) நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2024-25-ஆம் ஆண்டு இளநிலை பட்ட வகுப்புகளுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது. இதில், கணித பாடப் பிரிவில் 20 இடங்கள், இயற்பியல் பாடப் பிரிவில் 3 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.

இந்தக் கலந்தாய்வில் ஏற்கெனவே விண்ணப்பித்து இடம் கிடைக்காதவா்களும், இதுவரை விண்ணப்பிக்காதவா்களும் கலந்தாய்வில் பங்கேற்கலாம். கல்லூரிக்கு வரும்போது மாணவா்கள் பெற்றோா்களை உடன் அழைத்து வர வேண்டும்."

இணையதளத்தில் விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை கட்டாயம் கொண்டுவர வேண்டும். மேலும், பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் 2 நகல்கள் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும். பாஸ்போா்ட் அளவிலான 6 புகைப்படம், கல்லூரிக்கு செலுத்த வேண்டிய கட்டணத் தொகை ஆகியவற்றுடன் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!