தாராபுரம் பகுதியில் 83 பயனாளிகளின் இலவச வீட்டுமனைப் பட்டா ரத்து; கலெக்டர் தகவல்
Tirupur News- இலவச வீட்டு மனை பட்டாக்கள் ரத்து செய்யப்படும் என, திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவிப்பு (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today -தாராபுரம் வட்டத்தில் ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் வழங்கப்பட்ட 83 பயனாளிகளின் இலவச வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வட்டம், முளையாம்பூண்டி கிராமத்தில் ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் 165 நபா்களுக்கு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் வீடு கட்டிக்கொள்ள 1.74 ஹெக்டா் பரப்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.
தற்போது இலவச வீட்டுமனைப் பட்டா பெற்ற பயனாளிகளின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், முளையாம்பூண்டி கிராமத்தில் 83 பயனாளிகளை இனம் கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடா்பான கள விசாரணையின்போது பட்டியலில் உள்ள பயனாளிகள் அங்கு வசிக்கவில்லை எனவும், இதுகுறித்து அறிவிப்பு அளித்தும் விண்ணப்பம் அளிக்கவில்லை என்பதும் தெரியவருகிறது.
எனவே, பட்டாவில் உள்ள நிபந்தனையின்படி குறிப்பிட்ட காலத்துக்குள் வீடு அமைத்து குடியிருக்காமல் நிபந்தனையை மீறியுள்ளதால் பட்டாவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்ற விளக்கத்தை 15 நாள்களுக்குள் நேரிலோ அல்லது கடிதம் வாயிலாகவோ மாவட்ட கலெக்டர் அல்லது மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலருக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
தவறும்பட்சத்தில் பட்டியலில் கண்டுள்ள பயனாளிகள் கூறிக்கொள்ள விளக்கம் ஏதுமில்லை எனக்கருதி இலவச வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதன்மூலம், ஆதிதிராவிடர் நலத்துறை தரப்பில் 83 பயனாளிகள் குறித்த போதிய விவரங்களை அளிக்க அந்த பயனாளிகள் நேரில் முன்வராத நிலையில், அவர்கள் குறிப்பிட்ட அந்த பகுதியில் வசிக்கவில்லை என்பதும் விசாரணையில் உறுதியான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக, கலெக்டர் அதில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu