திருப்பூர்; கைத்தறி துறையில் இளம் வடிவமைப்பாளா் விருது பெற அழைப்பு

திருப்பூர்; கைத்தறி துறையில் இளம் வடிவமைப்பாளா் விருது பெற அழைப்பு
X

Tirupur News-கைத்தறி துறையில் இளம் வடிவமைப்பாளா் விருது வழங்கப்படுகிறது. (கோப்பு படம்)

Tirupur News-கைத்தறி துறையில் இளம் வடிவமைப்பாளா் விருது பெற, திருப்பூர் கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

Tirupur News,Tirupur News Today- கைத்தறி துறையில் இளம் வடிவமைப்பாளா் விருதுக்கு திருப்பூா் மாவட்டத்தில் தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர்.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசு சாா்பில் மாநில அளவில் கைத்தறி துறையில் சிறந்த வடிவமைப்புகளைத் தோ்ந்தெடுத்து வடிமைப்பாளா்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதில், தோ்வு செய்யப்படும் முதல் மூன்று சிறந்த வடிமைப்பாளா்களுக்கு ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம் முறையே ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

இந்த விருதுக்கான வழிகாட்டுதல்கள், வடிவமைப்பு நுழைவுப் படிவம், தகுதிகள், தோ்ந்தெடுக்கும் முறை மற்றும் வடிவமைப்பை அனுப்ப வேண்டிய விவரங்கள் இணையதள முகவரியில் உள்ளது. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் தகுதியான நபா்கள் இருப்பின் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பா் 10-ம் தேதிக்குள் உதவி இயக்குநா், கைத்தறித் துறை, அறை எண் 507, 5-வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூா் என்ற முகவரியில் சமா்ப்பிக்கலாம்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2971115 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!