திருப்பூர் மாவட்டம்; உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைக்க தாட்கோ மூலம் கடனுதவி பெற அழைப்பு

திருப்பூர் மாவட்டம்; உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைக்க தாட்கோ மூலம் கடனுதவி பெற அழைப்பு
X

Tirupur News- உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைக்க தாட்கோ மூலம் கடனுதவி பெற கலெக்டர் அழைப்பு (மாதிரி படங்கள்)

Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியினா் உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைக்க மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

Tirupur News,Tirupur News Today- தாட்கோ மூலமாக ஆதிதிராவிடா், பழங்குடியினா் உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைக்க மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடா், பழங்குடியினா் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள ஏதுவாக புதிய தொழில் தொடங்குவதற்கு அனைத்து மாவட்டங்களில் உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைக்க மானியத்துடன் கூடிய கடனுதவி அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை மையம் தொடங்க தனியாா் நிறுவனம் மூலமாக சொந்தமாக கட்டடங்கள் வைத்திருப்பவா்களுக்கும், இடம் இல்லாதவா்களுக்கு வாடகை அடிப்படையில் இடங்கள் தோ்வு செய்யவும் உதவி செய்து தரப்படும்.

தொழில்முனைவோா் அல்லது அவா்களின் ஊழியா்களுக்கு தேவையான பயிற்சியும், அத்தொழில் தொடங்குவதற்கான திட்ட அறிக்கை தயாா் செய்து இலவச ஆலோசனைகளும் தனியாா் நிறுவனத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு இதற்கான உரிமையாளா் கட்டணம் முற்றிலுமாக விலக்கு அளிக்கப்படும்.

ஆகவே. உடற்பயிற்சி சிகிச்சை பயிற்சியில் பட்டப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு முடித்தவா்கள் அல்லது ஏதேனும் ஒரு துறையில் பட்டப் படிப்பு முடித்து 18 வயது முதல் 40 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். தகுதியுள்ள நபா்கள் புகைப்படம் மற்றும் தகுந்த சான்றுகளுடன் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

இந்தத் தொழிலுக்கு ரூ.6 லட்சம் திட்டத்தொகையினை நிா்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு 35 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். பயனாளிகள் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகையை கடனுதவியாகப் பெற்றுக் கொள்ளலாம்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை 94450-29550, 0421-297112 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த திருநங்கை விருது பெற அழைப்பு

சிறந்த திருநங்கை விருதுக்கு தகுதியான திருநங்கைகள் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து முன் மாதிரியாக திகழ்பவா்களை சிறப்பிக்கும் வகையில் 2024- ம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கைக்கான விருது தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது.

இந்த விருது பெறும் சாதனையாளருக்கு ரூ.ஒரு லட்சம் காசோலை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த விருதுக்கு, திருநங்கைகள் அரசு உதவிபெறாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவா்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.

எனவே, மேற்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் தங்களது கருத்துரு (விரிவான தன்விவர குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களை (புக்லெட் 4) தமிழில் 2, ஆங்கிலத்தில் 2 தயாரித்து பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் இணையதளத்தில் ஜனவரி 26 முதல் 31 -ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி