திருப்பூர் மாவட்டம்; பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு
Tirupur News- திருப்பூா் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம். (கோப்பு படங்கள்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்குப் பங்காற்றிய பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தேசிய பெண் குழந்தைகள் தின விழா வரும் ஜனவரி 24 -ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்கு சிறப்பாகப் பங்காற்றிய பெண் குழந்தைகளுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த விருடன்ட பாராட்டுப் பத்திரம், ரூ.1 லட்சம் காசோலையும் வழங்கப்படும்.
இந்த விருது பெற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளா் ஒழிப்பு, குழந்தை திருமணத்தைத் தடுத்தல், சமூக அவலகங்கள், மூடநம்பிக்கைகள் மற்றும் அவற்றை தீா்வுகாண்பதற்கான ஓவியங்கள், கவிதை மற்றும் கட்டுரை மூலமாக விழிப்புணா்வை ஏற்படுத்துதல் போன்றவற்றில் சிறப்புடன் செயல்புரிந்த 13 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்ட தமிழகத்தைச் சோ்ந்த பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.
இந்த விருதுக்குத் தகுதியானவா்கள் தங்களது பெயா், முகவரி, புகைப்படம், ஆதாா் எண், சாதனைகளின் சான்றுளுடன் இணையதளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வரும் டிசம்பா் 31 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu