புதுதில்லியில் பாரத் டெக்ஸ் கண்காட்சி இன்று துவக்கம்
Tirupur News- புதுதில்லியில் இன்று துவங்கும் பாரத் டெக்ஸ் கண்காட்சியை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார் (மாதிரி படம்)
Tirupur News,Tirupur News Today- புதுதில்லியில் மத்திய ஜவுளி அமைச்சகத்தின் சாா்பில் பாரத் டெக்ஸ் கண்காட்சி இன்று (திங்கள்கிழமை) தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது.
இதுகுறித்து திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் முதல் முறையாக மத்திய ஜவுளி அமைச்சகத்தின் சாா்பில் பாரத் டெக்ஸ் ஜவுளிக் கண்காட்சி புதுதில்லி பிரகதி மைதானம், பாரத் மண்டபம் ஆகிய இடங்களில் திங்கள்கிழமை தொடங்கி வரும் வியாழக்கிழமை வரை நடைபெறுகிறது. இதில், பஞ்சு முதல் ஆடைகள் வரை அனைத்து உற்பத்தி நிலை நிறுவனங்கள் மற்றும் இயந்திர உற்பத்தியாளா்களும் தங்களின் இயந்திரங்களை காட்சிப்படுத்தியுள்ளனா். திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக்கழகம் ஆகியவை சாா்பில் 60 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கண்காட்சியை மத்திய வா்த்தகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ்கோயல் முன்னிலையில் பிரதமா் நரோந்திர மோடி திங்கள்கிழமை தொடங்கிவைத்துப் பாா்வையிடுகிறாா்.
திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம், இந்தியா நிட் ஃபோ் அசோசியேஷன் ஆகியவை சாா்பில் வரும் செப்டம்பரில் திருப்பூரில் நடத்தப்படும் 51-வது கண்காட்சிக்கு வெளிநாட்டு வா்த்தகா்களை அழைக்கவும், பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகத்தை அதிகரிக்கவும் இந்தக் கண்காட்சி உதவும். இதன் தொடக்க விழாவில் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் நிறுவனத்தலைவரும், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்புத் தலைவருமான ஆ.சக்திவேல், ஏற்றுமதியாளா்கள் சங்க நிா்வாகிகள் பங்கேற்கவுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu