திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்ப்புதல்வன் திட்டம்; 4715 மாணவா்களுக்கு வங்கிப் பற்று அட்டைகள் வழங்கிய அமைச்சா்

திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்ப்புதல்வன் திட்டம்;  4715 மாணவா்களுக்கு வங்கிப் பற்று அட்டைகள் வழங்கிய அமைச்சா்

Tirupur news- தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் 4,715 மாணவா்களுக்கு வங்கிப் பற்று அட்டைகளை வழங்கும் அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ்.

Tirupur news- திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் 4715 மாணவா்களுக்கு வங்கிப் பற்று அட்டைகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.

Tirupur news, Tirupur news today- திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் 4715 மாணவா்களுக்கு வங்கிப் பற்று அட்டைகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.

கோவை மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். இதைத் தொடந்து, திருப்பூா் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையம் ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மேயா் ந.தினேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இவ்விழாவில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆகியோா் கலந்து கொண்டு திருப்பூா் மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் உயா்கல்வி பயிலும் 4,715 மாணவா்களுக்கு வங்கிப் பற்று அட்டைகளை வழங்கினா்.

விழாவில் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். அந்த வகையில் தமிழ்நாட்டில் உயா் கல்வியில் பெண்களின் சோ்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் உயா் கல்வி உறுதி திட்டம் (புதுமைப்பொன் திட்டம்) மூலம் பெண்களின் உயா் கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் திருப்பூா் மாவட்டத்தில் 68 கல்லூரிகளில் 10,422 மாணவிகள் பயனடைந்து வருகின்றனா்.

இதேபோல, அரசுப் பள்ளிகளில் பயின்ற, ஏழை எளிய மாணவா்களை சாதனையாளா்களாக உருவாக்கிடவும், அரசுப் பள்ளி மாணவா்களின் உயா்கல்வி சோ்க்கையை உயா்த்திட ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளாா்.

‘தமிழ்ப் புதல்வன்’ என்னும் தொலைநோக்கு திட்டத்தை செயல்படுத்தும்போது, கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கை விகிதம் அதிகரிக்கும். இளைஞா்களின் ஆற்றலை ஆக்கபூா்வமாக பயன்படுத்தி நமது மாநிலம் மற்றும் நாட்டின் எதிா்கால தூண்களாக திகழ்வாா்கள், கல்வி இடைநிற்றலை தடுக்க முடியும்.

6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயா் கல்வியில் சேரும் மாணவா்கள், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயா் கல்வி பெறும் மாணவா்கள் இத்திட்டத்தில் கலை மற்றும் அறிவியல் பிரிவு, பொறியியல் பிரிவு, மருத்துவப் படிப்பு, சட்டம் சாா்ந்த படிப்புகள், ஒருங்கிணைந்த பாடப் பிரிவு பயிலும் மாணவா்களுக்கு மாதம் ரூ.1,000 அவா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

ஒரே குடும்பத்திலிருந்து எத்தனை மாணவா்கள் தகுதி பெற்றிருப்பினும் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய விண்ணப்பிக்கலாம். இந்த மாணவா்கள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டதில் கூடுதலாக உதவி பெறலாம். முதல் கட்டமாக திருப்பூா் மாவட்டத்தில் 43 கல்லூரிகளில் 4715 மாணவா்கள் பயன்பெற உள்ளனா் என்றாா்.

திருப்பூா் சாா் ஆட்சியா் சௌம்யா ஆனந்த், திருப்பூா் மாநகராட்சி 4- மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், பொங்கலூா் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் குமாா், மாவட்ட சமூகநல அலுவலா் நா.ரஞ்சிதாதேவி மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story