தாராபுரத்தில், ரூ. 50 லட்சம் மதிப்பிலான நெல் விதைகளை விற்க தடை
Tirupur News,Tirupur News Today-தாராபுரத்தில், ஆய்வு நடத்திய அதிகாரிகள் ரூ. 50 லட்சம் மதிப்பிலான நெல் விதைகளை விற்க தடை விதித்தனர்.
Tirupur News,Tirupur News Today - தாராபுரம் வட்டாரத்தில் உள்ள தனியார் விதை உற்பத்தி மற்றும் விதை விற்பனை நிலையங்களில் ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி தலைமையில் ஆய்வு குழுவினரால் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது சான்று பெற்ற நெல் விதைகளையே விற்பனை செய்ய வேண்டும் என்றும் மேலும் உண்மை நிலை விதைகளை விற்பனை செய்யும்போது முளைப்புத்திறன் அறிக்கை மற்றும் கொள்முதல் பட்டியலில் ரகம், குவியல் எண், காலாவதி நாள் உள்பட அனைத்து தகவல்களும் இருக்க வேண்டும். உண்மை நிலை விதைகளுக்கு உரிய பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் தாராபுரத்தில் சில நெல் விதை நிலையங்களில் விதை விற்பனை உரிமம், விதை இருப்பு மற்றும் விலை விவரப்பலகை, விதை இருப்பு பதிவேடு, விதை கொள்முதல் பட்டியல், விற்பனை பட்டியல், உண்மை நிலை விதைகளுக்கான பதிவேடுகள், முளைப்புதிறன் பரிசோதனை முடிவு அறிக்கை போன்றவை ஆய்வு செய்யப்பட்டது.
அதில் விதை இருப்பிற்கும், புத்தக இருப்பிற்கும் வேறுபாடு உள்ள விதைகள் மற்றும் விற்பனை பட்டியல் முறையாக பராமரிக்கப்படாத ரூ.50 லட்சம் மதிப்பிலான ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 730 கிலோ நெல் விதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.
மேலும் விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் போது விற்பனை ரசீது கொடுக்கப்பட வேண்டும். அதில் விதையின் பெயர், ரகம், குவியல் எண், காலாவதி நாள் ஆகியவற்றுடன் விவசாயியின் பெயர் மற்றும் முகவரியுடன் விதை வாங்குபவரின் கையொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும் என, ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுரை வழங்கினார்.
மேலும் விதை விற்பனை தொடர்பான ஆவணங்கள் இல்லாமல் விதை விற்பனை செய்வது விதைச்சட்டம்-1966, விதை விதிகள்- 1968 மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை-1983 ஆகியவற்றின்படி விதி மீறல் ஆகும். இது போன்ற விதை விற்பனை விதிமீறல்கள் கண்டறியப்படும் பட்சத்தில் விதை விற்பனையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu