அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகம்; அட்சதை அரிசி மக்களுக்கு வழங்க ஏற்பாடு
Tirupur News- அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 24ம் தேதி நடைபெற உள்ளது. (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 24-ம் தேதி நடக்கிறது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
சில நாட்களுக்கு முன் கும்பாபிஷேக விழாவின் துவக்கத்தை குறிக்கும் வகையில் அட்சத பூஜை பிரமாண்டமாக நடந்தது. அதில் நாடு முழுவதும் உள்ள அதன் 45 பிரிவுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் பங்கேற்றனர். பூஜையின் நிறைவில், அட்சதை அரிசி நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டு, மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்துக்கு வந்தடைந்த அட்சதை அரிசியை விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு நிர்வாகிகள் பெற்று கொண்டனர். தொடர்ந்து, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். அடுத்த மாதத்தில் இருந்து இந்து குடும்பங்களுக்கு வழங்க உள்ளனர்.
இதுகுறித்து திருப்பூர் பகுதி விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் கூறியதாவது,
மாநிலம் வாரியாக ராமர் கோவில் அட்சதை நிர்வாகிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. திருப்பூருக்கு வந்துள்ள அட்சதை அரிசியை ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்யப்பட உள்ளது. தொடர்ந்து இந்து குடும்பங்களுக்கு வழங்கும் வகையில் அட்சதையுடன் அரிசி கலக்கப்பட உள்ளது. பின் சிறிய பாக்கெட்டில் பேக் செய்யப்பட்டு டிசம்பர் மாதம் துவக்கத்தில் இருந்து அட்சதை மற்றும் ஸ்ரீராமர் படத்துடன் வழங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu