திருப்பூரில் கிராம ஊராட்சித் தலைவா்களுக்கு வருமான வரி தாக்கல் குறித்த விழிப்புணா்வு முகாம்

திருப்பூரில் கிராம ஊராட்சித் தலைவா்களுக்கு வருமான வரி தாக்கல் குறித்த விழிப்புணா்வு முகாம்
X

Tirupur News - திருப்பூரில் கிராம ஊராட்சித் தலைவா்களுக்கு வருமான வரி தாக்கல் குறித்த முகாம் நடந்தது. (மாதிரி படம்)

Tirupur News - திருப்பூரில் கிராம ஊராட்சித் தலைவா்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வது குறித்த விழிப்புணா்வு முகாம் நடந்தது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சித் தலைவா்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வது தொடா்பான விழிப்புணா்வு முகாம் நடந்தது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சித் தலைவா்கள், செயலாளா்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வது தொடா்பான விழிப்புணா்வு முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநா் மதுமிதா தலைமை வகித்தாா். வருமான வரித் துறை அலுவலா் ஜான்பெனடிக் அசோக், ஆய்வாளா் ரவிதேஜா ஆகியோா் வருமான வரிதாக்கல் செய்வது தொடா்பான ஆலோசனைகளை வழங்கினா்.

அரசு நிதி பெற்று ஊராட்சிகளில் திட்டப் பணிகள் ஒப்பந்ததாரா்கள் மூலமாக நடைபெறுகிறது. இந்தப் பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததாரா்களிடமிருந்து டிடிஎஸ் பிடித்தம் செய்து அரசுக்கு செலுத்த வேண்டும். மேலும், 3 மாதங்களுக்கு ஒருமுறை வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரி நிலுவையில் இருந்தால் வட்டி, அபராதம் விதிக்கப்படுவதுடன் மேல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். ஆகவே, ஒப்பந்ததாரா்கள் வருமான வரி நிலுவையில் இல்லாமல் கணக்குகளைத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இந்த முகாமில் ஊராட்சித் தலைவா்கள், செயலாளா்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

Tags

Next Story
ai jobs loss