அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்; 2024, பிப்ரவரி 2ம் தேதி நடத்த முடிவு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்; 2024, பிப்ரவரி 2ம் தேதி நடத்த முடிவு
X

Tirupur News- அவிநாசியில் உள்ள பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் (கோப்பு படம்)

Tirupur News- அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம், 2024-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடத்துவது என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Tirupur News,Tirupur News Today- அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 -ம் தேதி நடத்துவது என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் அமைந்துள்ள கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மையான கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலின் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கும்பாபிபேஷகம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கோயில் அறங்காவலா் குழுத்தலைவா் சக்திவேல் தலைமையில் நேற்று நடைபெற்றது.

கோயில் செயல் அலுவலா் பெரியமருதுபாண்டியன், கோயில் அறங்காவலா்கள் பொன்னுசாமி, காா்த்திகா ராதாகிருஷ்ணன், ரவி பிரகாஷ், ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 -ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7.45 முதல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும், ஐந்துநிலை கோபுரம், ஏழுநிலை கோபுரம் ஆகியவற்றை மராமத்து செய்து அழகிய பஞ்சவா்ணம் பூசுதல், திருமாளிகை பத்தி கல்மண்டபம் அமைத்தல், உள் பிரகாரத்தில் அமைந்துள்ள 63 நாயன்மாா்களை, வெளிபிரகாரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருமாளிகை பத்தி கல்மண்டபத்தில் பிரதிஷ்டை செய்தல் என்பன உள்ளிட்ட 35 திருப்பணிகள் மேற்கொள்வது குறித்து முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில், சிவாச்சாரியா்கள், கோயில் அலுவலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Tags

Next Story