அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் காவிரி தீர்த்தம் எடுத்து திருவீதி உலா
Tirupur News- அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதால், பக்தர்கள் காவிரி தீர்த்தம் எடுத்து திருவீதி உலா வந்தனர்.
Tirupur News,Tirupur News Today- அவிநாசி கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, இன்று, (திங்கள் கிழமை) காலை பக்தர்கள் காவிரி தீர்த்தம் எடுத்து திருவீதி உலா வந்தனர்.
கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரர் நாயனார் தேவார பதிகம் பாடி உயிருடன் மீண்டும் உயிர்ப்பித்து எழச் செய்த திருத்தலமாகவும் பிரசித்தி பெற்ற கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் விளங்குகிறது. இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த புதன்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக இன்று (திங்கள்கிழமை) காலை புதுப்பாளையம், ராயம்பாளையம் சன்னை மிராஸ்தாரர்கள், தைப்பூச பழனி யாத்திரை குழுவினர், பல்வேறு பகுதி பொதுமக்கள் எடுத்து வந்த காவிரி தீர்த்தக் குடம் திருவீதி உலா நடைபெற்றது. அவிநாசி வீர ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து குதிரை, காளை மாடு உள்ளிட்டவைகளுடனும் வானவேடிக்கை, கைலாய வாத்தியம் முழங்கவும் புறப்பட்ட தீர்த்தக்குட ஊர்வலம் மேற்கு, வடக்கு, கிழக்கு ரத வீதிகளின் வழியாக வந்து அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நிறைவடைந்தது.
இதில் சிறுவர்கள், பெரியவர்கள், சிவனடியார்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதை யடுத்து சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. திங்கள்கிழமை மாலை முதல் கால யாக பூஜை தொடங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 2-ம் தேதி வெள்ளிக்கிழமை வரை எட்டு கால யாக பூஜை நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்வாக பிப்ரவரி 2-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம், இரவு 8 மணிக்கு சுவாமி திருவீதி உலா உள்ளிட்டவை நடைபெறுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu