அவிநாசிலிங்கேஸ்வர் கோவில் கும்பாபிஷேக விழா; கணபதி ஹோமத்துடன் துவக்கம்
Tirupur News- கணபதி ஹோமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற கோவில் நிர்வாகிகள், பக்தர்கள்.
Tirupur News,Tirupur News Today- அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், பிப்., 2ல் கும்பாபிேஷகம் நடைபெற உள்ள நிலையில், கணபதி ஹோமம் நேற்று நடைபெற்றது.
கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையாக விளங்கும் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வந்தது. பிப்., 2ம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிேஷகத்துக்கு, 9 நாளே உள்ள நிலையில், திருப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இந்நிலையில், கும்பாபிஷேக விழாவின் துவக்கமாக, கணபதி ஹோமம் நேற்று யாகசாலை வளாகத்தில் நடைபெற்றது. இதில், அவிநாசி கோவில் சிவாச்சார்யார்கள் நான்கு வேதங்களையும், ஓதுவா மூர்த்திகள் திருமுறைகளையும் பாராயணம் செய்தனர்.
கோவில் செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன், அறங்காவலர்கள் பொன்னுசாமி, ஆறுமுகம், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், பெங்களூரு ஸ்ரீஸ்ரீகுருகுல வேதாகம பாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி சிவம், பாடசாலை மாணவர்கள், திருப்பணி உபயதாரர்கள் பங்கேற்றனர்.
79 யாக குண்டம்; 100 சிவாச்சார்யார்
கும்பாபிஷேக விழா குறித்து, அவிநாசி கோவில் குருத்துவ ஸ்தானீகம் சிவகுமார் சிவாச்சார்யார் கூறியதாவது:
கும்பாபிஷேக யாக சாலை பூஜைகளுக்காக நேற்று மஹா கணபதி ஹோமம் நடைபெற்றுள்ளது. வரும் 29ம் தேதி மாலை முதல் கால யாக பூஜைகள் துவங்கி, 2ம் தேதி கும்பாபிஷேக நாள் வரை எட்டு கால யாக பூஜைகள் நடைபெறுகிறது.
யாகசாலையில் ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர், வள்ளி, தெய்வானையுடன் உள்ள ஸ்ரீசுப்பிரமணியர் ஆகிய மூர்த்திகளுக்க, 27 யாக குண்டங்கள், பரிவார தெய்வங்களான ஸ்ரீ கணபதி, ஸ்ரீ கால பைரவர், ஸ்ரீ பாதிரி மரத்து அம்மனுக்கு, 5 யாக குண்டங்கள் என மொத்தம், 79 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், 100 சிவாச்சாரியார்கள் யாக பூஜைகளை மேற்கொள்கின்றனர். 54 ஓதுவா மூர்த்திகள் பங்கேற்று தினந்தோறும் தேவாரம், திருமுறை பாராயணம் செய்கின்றனர். முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம், 2ம் தேதி காலை, 9:15 முதல் 10:15 மணிக்குள் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அவிநாசி கோவில் கும்பாபிேஷக அன்னதானம்: கட்டாயம் அனுமதிச்சீட்டு பெற வேண்டும்
அவிநாசி கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம், பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது.
உணவு பாதுகாப்பு துறை அலுவலர் (பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி, பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி முன்னிலை வகித்து, கூறியதாவது,
உணவு தயாரிக்க தரமான சமையல் பொருட்கள், தண்ணீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். நான்கு ரத வீதிகளில் வாகனங்கள் மூலம் அன்னதானம் வழங்கக் கூடாது. பேரூராட்சி நிர்வாகத்தில் அனுமதிச்சீட்டு பெற்று குடிநீர், உணவு தயாரிக்க பெற்றுக் கொள்ளலாம். மீதமான உணவுப் பொருட்களை சாலைகளில், பொது இடங்களில் கொட்டக்கூடாது.
உணவு பாதுகாப்பு துறை மூலம் உணவு மாதிரிகள் சேகரிக்கப்படுவதால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் தரமான பொருட்களை கொள்முதல் செய்து பயன்படுத்தி அன்னதானம் தயாரிக்க வேண்டும்.
கூட்டத்தில், தி.மு.க., முன்னாள் நகர செயலாளர் பொன்னுசாமி, கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன், அவிநாசிலிங்கேஸ்வரர் தேர்த்திருவிழா அன்னதான கமிட்டி தலைவர் நடராஜன், நிர்வாகி அப்புசாமி, குலாலர் கல்யாண மண்டப நிர்வாகி குழந்தைவேலு, ஸ்ரீ கருணாம்பிகை அன்னதான கமிட்டி சேகர், வெங்கடாசலம், கோவம்ச திருமண மண்டப மேலாளர் வேலுசாமி, பூவாசாமி கவுண்டர் மண்டபம் பொன்னுசாமி, தேவேந்திரகுல வேளாளர் மண்டபம் லோகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu