சிறுமிக்கு 'வாட்ஸ் ஆப்' தொல்லை: பீகார் தொழிலாளி அடித்துக் கொலை

சிறுமிக்கு வாட்ஸ் ஆப் தொல்லை: பீகார் தொழிலாளி அடித்துக் கொலை
X
அவினாசி அருகே, சிறுமிக்கு 'வாட்ஸ் ஆப்' மூலம் தொல்லை கொடுத்த பீகார் மாநிலத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே உள்ள தெக்கலூரில் தனியார் பனியன் நிறுவனத்தில் தங்கி பணியாற்றி வந்தவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரித்தீஷ்யாதேவ் மகன் அனில்குமார்(22). இவர், தெக்கலூர் அருகே எம்.நாதம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படித்து வரும் கோவைச் சேர்ந்த சிறுமிக்கு, தொடர்ந்து வாட்ஸ் ஆப் மூலம் ஆபாச செய்தி அனுப்பி, வந்தாக கூறப்படுகிறது.

இதையறிந்த சிறுமியின் உறவினர்கள், அனில்குமாரை எச்சரித்தும் அவர் கேட்காததால், சிறுமியின் உறவினர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த அனில்குமார், கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வழக்குபதிவு செய்த அவினாசி காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு, அனில்குமாரை தாக்கி கொலை செய்த, சிறுமியின் உறவினர்களான கோவையச் சேர்ந்த குமாரசாமி மகன் ரவி(40), ராஜூ மகன் பாபு(40), எம்.நாதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் ரஞ்சித்(23), செல்வராஜ் மகன் மணிகண்டன்(23) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!