புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சியில் நீர்த்தேக்க தொட்டி பணி துவக்கம்

புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சியில்  நீர்த்தேக்க தொட்டி பணி துவக்கம்
X

புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சியில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க, பூமி பூஜை போடப்பட்டது. 

கிராமப்புற தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, குடிநீர்த் தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு, புஞ்சை தாமரைக்குளம் பகுதியில் பூமி பூஜை போடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி ஊராட்சி ஒன்றியம், புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சி, பெரிய ஒட்டர்பாளையத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்க, பூமி பூஜை போடப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெகதீசன், தலைமை வகித்தார். புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார், முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள், நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இத்திட்டம் நிறைவேறும் பட்சத்தில், மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தியாகும் என, ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!