யானை பலம் வந்துளள்து: அவினாசியில் வி.கே. சசிகலா பேச்சு

யானை பலம் வந்துளள்து:  அவினாசியில் வி.கே. சசிகலா பேச்சு
X

அவினாசிக்கு வருகை தந்த வி.கே. சசிகலா. 

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், சாமி தரிசனம் செய்த வி.கே.சசிகலா, தனக்கு யானை பலம் வந்துள்ளது என்றார்.

ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்ட, மறைந்த முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா, நேற்று முன்தினம் இரவு, திருப்பூர் மாவட்டம், அவினாசியில் உள்ள பிரசித்த பெற்ற, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வந்தார். அவருக்கு, அவரது ஆதரவாளர்கள், ஆளுயர மாலை அணிவித்தும், மலர் செண்டு, சால்வை வழங்கியும் வரவேற்பு வழங்கினர்.

முன்னதாக, சேவூர் பகுதியில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,''இத்தனை பேர் ஆதரவு தரும் போது, எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. ஜெயலலிதா வழங்கிய ஆட்சியை மீண்டும் வழங்கி, ஏழை, எளியோருக்கு என் உயிர் உள்ளவரை நல்லது செய்வேன். கவலைப்படாமல் இருங்கள். எல்லாவற்றிற்கும் ஒரு நல்ல முடிவு வரும். உங்கள் அன்பை பார்க்கும் போது, யானை பலம் வந்தது போன்றுள்ளது,'' என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!