அவினாசியில் ஒரு மாதத்திற்கு வில்லிபாரதம் சொற்பொழிவு

அவினாசியில் ஒரு மாதத்திற்கு வில்லிபாரதம் சொற்பொழிவு
X

திருச்சி கல்யாணராமன்

அவினாசியில், ஸ்ரீவீர ஆஞ்சநேயர் பக்த பேரவை சார்பில், ஒரு மாத காலம் வில்லிபாரதம் சொற்பொழிவு நடக்கிறது.

ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம் அவினாசி, ஸ்ரீவீர ஆஞ்சநேயர் பக்த பேரவை சார்பில், ஆன்மிக சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை (16ம் தேதி) துவங்கி, அடுத்த மாதம் 13ம் தேதி வரை, இந்த சொற்பொழிவு நடக்கிறது. ஸ்ரீவிஜயாஸராஜர் ராமநாம பஜனை மடத்தில் நடக்கும் இந்த சொற்பொழிவில், திருச்சி கல்யாணராமன், வில்லிபாரத சொற்பொழிவு ஆற்றுகிறார். தினமும், காலை, 7:00 மணி முதல், 8:00 மணி வரையும், மாலை 6:30 மணி முதல், 8:30 மணி வரையும் இந்த சொற்பொழிவு நடக்கிறது.

Tags

Next Story
ai in future agriculture