நடுவச்சேரியில் சாலை வசதி கேட்டு கிராமக்கள் உண்ணாவிரதம்

நடுவச்சேரியில் சாலை வசதி கேட்டு கிராமக்கள் உண்ணாவிரதம்
X

அவிநாசி நடுவச்சேரியில் சாலை வசதி கேட்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

திருப்பூர் மாவட்டம்,நடுவச்சேரியில் சாலை வசதி கேட்டு மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், நடுவச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட தளஞ்சிப்பாளையத்தில் இருந்து, மாரப்பம்பாளையம் வரையுள்ள சாலை, படுமோசமான நிலையில் குண்டும், குழியுமாக, சேறு நிறைந்து காணப்படுகிறது.

இந்த சாலையை புதுப்பிக்க வலியுறுத்தி, களஞ்சியம் விவசாயிகள் சங்கத்தின் நவீன்பிரபு தலைமையில் சிலர் நேற்று உண்ணாவிரதம் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நுாறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் இப்பணி மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா