தாசபாளையத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை முகாம்

கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், கஞ்சப்பள்ளி ஊராட்சி, தாசபாளையத்தில் முகாம் நடந்தது. ஆடு, மாடு, கோழி, நாய் உள்ளிட்ட 1,200 கால்நடைகளுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டது. குடற்புழு நீக்கம், சினை ஊசி போடுதல், வெள்ளைக் கழிசல் நோய்க்கு தடுப்பூசி போடுதல், உன்னி மருந்து அளித்தல் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
கால்நடை மருத்துவர் யசோதா பேசுகையில், "கால்நடைகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் தடுப்பூசி போடவேண்டும். கால்நடை பராமரிக்கும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சத்தான, தரமான, தீவனங்களை கால்நடைகளுக்கு வழங்க வேண்டும்" என்றார்.
முகாமில், சிறந்த மூன்று கிடாரிகளுக்கும், கால்நடை மேலாண்மை சிறப்பாக செய்த மூவருக்கும் ஊராட்சி தலைவர் சித்ரா பரிசு வழங்கினார். கால்நடை ஆய்வாளர் ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu