அவிநாசி அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு சிறப்பு முகாம்
அவிநாசி அருகே நடுவசேரி ஊராட்சி தளஞ்சிபாளையத்தில் கால்நடை மருத்துவ முகாமை ஊராட்சி தலைவர் கே.சி. வரதராஜன் துவக்கி வைத்தார்.
கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமில், 300க்கும் மேற்பட்ட மாடுகள் பயன்பெற்றன.
திருப்பூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், அவிநாசி நடுவச்சேரி ஊராட்சி, தளிஞ்சிப்பாளையத்தில், கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடந்தது. இதில், கால்நடைகளுக்கு சிகிச்சை, தற்காலிக மலட்டுத்தன்மை நீக்கம், தடுப்பூசி, கருவூட்டல், சினைப்பரிசோதனை, குடற்புழு நீக்கம், அறுவை சிகிச்சை உள்ளிட்டவை சார்ந்த பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பரிமளராஜ்குமார் முகாமை துவக்கி வைத்தார். நடுவச்சேரி ஊராட்சி தலைவர் கே.சி.வரதராஜன், முன்னிலை வகித்தார். அவிநாசி கால்நடை மருத்துவனை உதவி மருத்துவ அலுவலர் (கூடுதல் பொறுப்பு) இளவரசன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் ராமசந்திரன் ஆகியோர், மாடு உள்ளட்ட கால்நடைகளுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கினார். 312 கால்நடைகள் பயன் பெற்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu