அவினாசியில் இதுவரை 3 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

அவினாசியில் இதுவரை 3 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
X
அவினாசியில், 3 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சி, அவிநாசி பேரூராட்சி மற்றும், 31 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய அவிநாசி வட்டாரத்தில், 1.76 லட்சம் பேர், கொரோனா தடுப்பூசி செலுத்த தகுதியுள்ளவர்கள், என, சுகாதாரத்துறையினரால் கணக்கெடுக்கப்பட்டது. உள்ளூரில் வசிக்கும் இவர்கள் தவிர, நிறுவனங்களில் பணிபுரியும் வட மாநிலத்தவர், பிற மாவட்டங்களில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் என, 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சுகாதார துறையினர் கூறியதாவது: கொரோனா விதிமுறை தளர்த்தப்பட்டாலும், அடிக்கடி கை கழுவுவது, சமூக இடைவெளி பின்பற்றுவது, தொடர்ந்து சளி, காய்ச்சல் இருந்தால், மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து கொள்வது, மருத்துவரின் பரிந்துரைக்கேற்ப மருந்து, மாத்திரை உட்கொள்வது போன்றவற்றை கடைபிடிப்பது நல்லது என்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!