பஸ் நிறுத்தங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம்: பாெதுமக்கள் ஆர்வம்

பஸ் நிறுத்தங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம்: பாெதுமக்கள் ஆர்வம்
X

அவினாசி – சேவூர் சாலையின் இடையேயுள்ள சூளை பஸ் நிறுத்தத்தில் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்தப்பட்டது.

பஸ் நிறுத்தங்களில் நடத்தப்படும் தடுப்பூசி செலுத்தும் முகாமில், அதிகளவு மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.

பஸ் நிறுத்தங்களில் நடத்தப்படும் தடுப்பூசி செலுத்தும் முகாமில், அதிகளவு மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.

பரபரப்பான வாழ்க்கை சூழலில், எதுவும் எளிதாக நடந்துவிட வேண்டும் என்பதே மக்களின் மனநிலை. காத்திருந்து நேரத்தை வீணடிக்க, யாரும் விரும்புவதில்லை. கொரோனா தொற்றில் இருந்து உயிர் காப்பதாக சொல்லப்படும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் கொள்ளும் விவகாரத்திலும், மக்களின் மனநிலை அப்படிதான் இருக்கிறது.

எளிதாக சென்று, விரைவாக தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். உதாரணமாக, திருப்பூர் மாவட்டம், அவினாசி பேரூராட்சியில், ஆங்காங்கே உள்ள அரசுப் பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்தப்பட்டது. அதே நேரம், புதிய பஸ் ஸடாண்ட் பகுதியிலும், முகாம் நடத்தப்பட்டது. முகாம் முடிவில், பஸ் ஸ்டாண்டில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை பிற இடங்களை காட்டிலும் அதிகமாக இருந்தது.

இதே போன்று, கடந்த வாரம் நடந்த முகாமில், முதன்முறையாக, அவினாசி – சேவூர் சாலையின் இடையேயுள்ள சூளை பஸ் நிறுத்தத்தில் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்தப்பட்டது. அங்க, 222 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். எனவே, பொதுமக்கள் எளிதாக சென்று வரும் இடங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்துவதன் மூலம், கூடுதல் பலன் கிடைக்கிறது என்பதை இதன் மூலம் அறிந்துக் கொள்ள முடிகிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்