உடுமலையில் தீ விபத்து: 7 மீன் கடை எரிந்து சேதம்

உடுமலையில் தீ விபத்து: 7  மீன் கடை எரிந்து சேதம்
X
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 மீன் கடைகள் எரிந்து சேதமடைந்தன.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு எதிரில், ௧௦-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. நள்ளிரவில் திடீரென ஒரு மீன் கடையில் ஏற்பட்ட தீ விபத்தால், தீ மளமள வென பரவியது.

இந்த, தீ பரவியதில் அங்கிருந்த 7 கடைகள் எரிந்து சாம்பலாகின. தீ விபத்து பற்றிய தகவல் அறிந்த, உடுமலைப்பேட்டை தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்துக்கு வந்து தீயை போராடி அணைத்தனர்.

தீ விபத்து குறித்து, கொமரலிங்கம் போலீஸார் விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், மின் கசிவே தீ விபத்துக்கு காரணம் என்று தெரியவந்தது.

Tags

Next Story
ai marketing future