ஊக்கத்தொகை பெறுவதில் சிக்கல்! தீர்வு காண்கிறது வேளாண்துறை

ஊக்கத்தொகை பெறுவதில் சிக்கல்! தீர்வு காண்கிறது வேளாண்துறை
X
பி.எம்., கிஸான் திட்டத்தில், ஊக்கத்தொகை கிடைக்கப்பெறாத விவசாயிகள், வேளாண்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

பி.எம்., கிஸான் திட்டத்தில், ஊக்கத்தொகை கிடைக்கப்பெறாத விவசாயிகள், வேளாண்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

திருப்பூர் மாவட்டம், அவினாசி வேளாண்மை துறையினர் கூறியதாவது:

அவினாசி வட்டாரத்தில், பயனாளியின் வங்கிக்கணக்கில் அல்லாமல், பிற வங்கிக்கணக்கில் ஊக்கத்தொகை வரவு வைக்கப்பட்ட விவசாயிகள், ஆதார் எண்ணில் திருத்தம் செய்யப்படாததால், உதவித்தொகை கிடைக்கப்பெறாத விவசாயிகளுக்கு, குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, இந்த முறை அரசால் விடுவிக்கப்பட்ட 2,000 ரூபாய் ஊக்கத்தொகை, விவசாயிகளின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்பட்டிருக்கும். ஊக்கத்தொகை கிடைக்கப்பெறாத விவசாயிகள், அவினாசி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி, தொகையை பெறுவதற்கான வழிமுறையை ஏற்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!