/* */

ராஜ்ய புரஸ்கார் விருது: திருப்பூர் மாவட்ட மாணவ, மாணவியருக்கு பயிற்சி

‘ராஜ்ய புரஸ்கார்’ விருது பெற, திருப்பூர் மாவட்ட மாணவ, மாணவியருக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

ராஜ்ய புரஸ்கார் விருது: திருப்பூர் மாவட்ட மாணவ, மாணவியருக்கு பயிற்சி
X

ராஜ்ய புரஸ்கார் விருதுக்கான முன் மாதிரி தேர்வு முகாமில் சாரண சாரணியர் கூடாரம் அமைத்து தங்களது செயல் திறமையை வெளிப்படுத்தினர்.

––

திருப்பூர் கல்வி மாவட்ட சாரண சாரணியர் இயக்கம் சார்பில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் சாரண, சாரணியர்களுக்கு, 'ராஜ்ய புரஸ்கார்' விருது பெறுவதற்கான, முன்தேர்வு பயிற்சி முகாம், திருமுருகன்பூண்டியில் உள்ள ஏவிபி., பள்ளி வளாகத்தில் நடந்தது.

மாவட்ட சாரண, சாரணியர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட உதவி ஆணையருமான ராஜாராம் மேற்பார்வையில், துணை செயலாளர் தனசிங் முன்னிலையில், முகாம் நடந்தது. இந்த முகாமில், அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.ஜி.எஸ்., பள்ளி, மைக்ரோ கிட்ஸ் பள்ளி, ஏ.வி.பி., ஆகிய பள்ளிகளில் படிக்கும், 50க்கும் மேற்பட்ட சாரண சாரணியர் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு எழுத்து மற்றும் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டன. வனப்பகுதி உள்ளிட்ட ஒதுக்குப்புறமான இடங்களுக்கு செல்லும் போது, கூடாரம் அமைத்து, அதில் தங்குவது குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

Updated On: 28 Dec 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  7. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...
  8. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  9. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்
  10. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...