அவினாசியில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பயிற்சி

அவினாசியில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பயிற்சி
X

சமுதாய ஆதரவு மற்றும் பயற்சி கூட்டம், 'விழுதுகள்' அமைப்பின் சார்பில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பயிற்சி நடத்தப்பட்டது.

அவினாசியில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் சமுதாய ஆதரவு மற்றும் பயிற்சி கூட்டம், ‘விழுதுகள்’ அமைப்பின் சார்பில் நடத்தப்பட்டது.

பின்னலாடை மற்றும் நூற்பாலைகளில் பணிபுரியும் வட மாநில புலம் பெயர்ந்த பெண்களுக்கான சமுதாய ஆதரவு மற்றும் பயிற்சி, அவினாசியில் வழங்கப்பட்டது.

ஒடிசா, பீகார், சத்தீஸ்கர், அசாம் மாநிலங்களில் இருந்து வந்து, இங்கு தங்கி பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு பணியிட பாதுகாப்பு, சுகாதாரம், பெண்களின் பாதுகாப்பு, உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

'விழுதுகள்' நிறுவனர் இயக்குனர் தங்கவேல் தலைமை தாங்கி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். திட்ட மேலாளர் சந்திரா, கூட்டத்தை நடத்தினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதா, நன்றி கூறினார்.

Tags

Next Story
ai marketing future