அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்தி புறப்பாடு

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்தி புறப்பாடு
X

Tirupur News. Tirupur News Today- அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்றிரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி நடந்தது.

Tirupur News. Tirupur News Today-அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி நடந்தது.

Tirupur News. Tirupur News Todayஅவிநாசியில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு நேற்று இரவு 10.30 மணியளவில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் விநாயக பெருமான் மூசிக வாகனத்திலும், சோமஸ்கந்தர் ரிஷப வாகனத்திலும், கருணாம்பிகை அம்மன் காமதேனு வாகனத்திலும், சுப்பிரமணியர் மயில் வாகனத்திலும், பூமிநீளாதேவி கரி வரதராஜப் பெருமாள் கருட வாகனத்திலும் எழுந்தருளி 63நாயன்மார்களுக்கு காட்சி தந்த வைபவம் நடந்தது. அப்போது வாணவேடிக்கை, அதிர் வேட்டுகள் முழங்க சிவகன பூத வாத்தியம் இசைக்கப்பட்டது.

கோவிலில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடு கடைவீதி, மேற்கு ரதவீதி, வடக்குரவீதி, கிழக்கு ரதவீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுவாமி உலா வரும் வீதிகளில் வழி நெடுகிலும், மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டு பூரம் குடைகள் அமைக்கப்படிருந்தன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கற்பக விருட்சம், திருக்கல்யாணம், யானை வாகன காட்சிகள் நடக்கிறது. நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு பூரநட்சத்திரத்தில் பஞ்ச மூர்த்திகளும், பெருமாளும் திருதேருக்கு எழுந்தருளல் நடக்கிறது.

2-ம் தேதி காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து சிறிது தொலைவு இழுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறது. 3-ம் தேதி காலை 9 மணிக்கு மீண்டும் தேர் இழுக்கபட்டு நிலை அடைகிறது. 4-ம் தேதி காலை 8 மணிக்கு அம்மன் தேர் இழுக்கப்படுகிறது. அன்று மாலை வண்டித்தாரை நிகழ்ச்சி நடக்கின்றது. 5-ம் தேதி பரிவேட்டை, 6-ம் தேதி தெப்பதேர் விழாவும், 7-ம் தேதி நடராஜர் தரிசனம் நிகழ்ச்சியும், 8-ம் தேதி காலை மஞ்சள் நீர் விழாவும், மாலையில் மயில் வாகன காட்சியும் நடக்கிறது.

தேர்த்திருவிழாவையொட்டி, அன்னதானம் வழங்கப்படும் திருமண மண்டபங்களில் கட்டாயமாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். அவசியம் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பொது மக்களுக்கு பாதுகாப்பான முறையில் உணவு தயாரித்து வழங்க வேண்டும். கொரோனா அறிகுறிகள் மற்றும் தொற்றுநோய் பாதிக்கப்பட்ட பணியாளர்களை உணவு சமைக்க, பரிமாற அனுமதிக்க கூடாது. உணவு தயாரிக்க தரமான சமையல் பொருட்கள் மற்றும் குளோரினேசன் செய்யப்பட்ட தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

தேர் செல்லும் நான்கு ரத வீதிகளில் வாகனங்கள் மூலம் அன்னதானம் வழங்கக்கூடாது. உணவு தயாரிக்க பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் அனுமதி சீட்டு பெற்று குடிநீர் பெற்றுக்கொள்ளலாம். மீதமான உணவுப் பொருட்களை எக்காரணம் கொண்டும் வடிகால்களிலோ, சாலைகளிலோ, பொது இடங்களிலோ கொட்ட கூடாது. உணவு பாதுகாப்பு துறை மூலம் உணவு மாதிரிகள் சேகரிக்கப்படுவதால் தரமான பொருட்களை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் கொள்முதல் செய்து பயன்படுத்தி அன்னதானம் வழங்க வேண்டும். திருமண மண்டபங்களில் தேர்வரும் நேரங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்த கழிவறைகளை அனுமதிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா