திருப்பூரில் 110படுக்கையுடன் கொரோனா வார்டு: முதல்வர் துவக்கிவைத்தார்
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் திறந்து வைத்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் பயன்பெற 110 ஆக்சிஜன்யுடன் கூடிய கொரோனா வார்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் கொரோனா 2 வது அலை மிக வேகமாக பரவியது. குறி்ப்பாக ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் பரவலும், இறப்பும் நடந்து வருகிறது. இந்த மாவட்டங்களை கண்காணிக்க கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, கொரோனா கண்காணிக்கப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா நிலைபாடு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரடியாக களமிறங்கி ஆய்வு செய்து வருகிறார். இன்று காலை ஈரோட்டில் ஆய்வு செய்த பிறகு, திருப்பூர் மாவட்டத்தில், குமரன் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 110 ஆக்சிஜன் வசியுடன் கூடிய வார்டு, 20 இன்நோவா கார் ஆம்புலன்ஸ் துவக்கி வைத்தார்.அதைத்தொடர்ந்து 6, டாக்டர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியம், சாமிநாதன், கயல்விழி, முத்துசாமி, கலெக்டர் விஜய்கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu