அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் திருமாளிகை பத்தி மண்டபம்
Tirupur News-அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் திருமாளிகை பத்தி மண்டபம்.
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள ஸ்ரீஅவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம், நேற்று முன்தினம் விமரிசையாக நடந்தது.
கோவில் வெளிப்பிரகாரத்தில் வடபுறத்தில் மட்டுமே திருமாளிகை பத்தி மண்டபம் இருந்தது. தற்போது, மேற்கு மற்றும் தெற்கு பகுதியிலும் திருமாளிகை பத்தி மண்டபம், கருங்கற்களால் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. தி சென்னை சில்க்ஸ் குழுமம், குழந்தைவேல் முதலியார் குடும்பம் சார்பில், 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இந்த மண்டபம் மூலம், எழிலார்ந்த கோவிலாக மாற்றப்பட்டுள்ளது.
நவீன தொழில் வல்லுனர்கள் உதவியுடன், அழகிய கற்துாண்கள், வேலைப்பாடு நிறைந்த சட்டக்கற்களுடன், மூன்றே மாதங்களில் திருமாளிகை பத்தி மண்டபம் கட்டி முடித்ததை, சிவபக்தர்கள் பாராட்டியுள்ளனர்.
கும்பாபிேஷக விழாவில், சிறப்பு பூஜைகள் நடத்திய பின் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கல் மண்டபம், கோவில் நிர்வாகம் வசம், தி சென்னை சில்க்ஸ் குழும நிர்வாகிகள் ஒப்படைத்தனர்.
தி சென்னை சில்க்ஸ் குழும நிர்வாகி நந்தகோபால் கூறியதாவது:
அவிநாசி அருகே உள்ள தேவராயன்பாளையம் எங்கள் பூர்வீகம். எங்கள் தாத்தா துவங்கி, முன்னோர்கள், அவிநாசி கோவில் விழாக்களின் போது, பல்வேறு இறைசேவை செய்து வந்துள்ளனர்.
கோவில் நிர்வாகம், அறங்காவலர் குழுவினர், திருமாளிகை பத்தி மண்டபம் அமைப்பது குறித்து கேள்விப்பட்டு, எங்கள் ஆத்ம திருப்திக்காக, எமது குடும்பத்தினர் சார்பில், அமைத்து கொடுத்துள்ளோம். அவிநாசிலிங்கேஸ்வரர் இறைசேவை செய்ய எங்களுக்கும் வரம் கிடைத்துள்ளது, என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu