அவினாசியில் வருகிறது 'டைடல் பார்க்'!
பைல் படம்.
தமிழகத்தில், அதிகளவிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், உள்நாடு மட்டுமின்றி, உலக நாடுகளில் உள்ள நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் துவங்கவும், முதலீடு செய்யவும் ஊக்குவிப்பு வழங்கி வருகிறது. சமீபத்தில் கூட மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின், துபாய் சென்று, 2,600 கோடி ரூபாய்க்கு முதலீடுகளை ஈர்த்துள்ளார்.
குறிப்பாக, இன்றைய தலைமுறையினர் அதிகம் விரும்பும், தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.,) மற்றும் டெக்னாலஜி துறையில் வேலை வாய்ப்புகளை அதிகளவில் உருவாக்கும் நோக்கில், கட்டமைப்பை உருவாக்க திட்டம் வகுக்ககப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தரத்தில் உள்ள நகரங்களில் 'டைடல் பார்க்' உருவாக்கப்படும் என, கடந்தாண்டு, ஆகஸ்ட் மாதம் நடந்த சட்டசபை கூட்டத் தொடரில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில், திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகாவுக்கு உட்பட்ட ராக்கியபாளையத்தில் 'டைடல் பார்க்' அமைய இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. கட்டுமானப்பணி, எலக்ட்ரிக்கல் வேலை, பிளம்பிங் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு, 'சென்னை டைடல் பார்க்' சார்பில் டெண்டர் கோரியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu