தெக்கலூா் ஊராட்சித் தலைவரை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு

தெக்கலூா் ஊராட்சித் தலைவரை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு
X

Tirupur News- அவிநாசி அருகே தெக்கலூா் ஊராட்சித் தலைவரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். (கோப்பு படம்)

Tirupur News- அவிநாசி அருகே தெக்கலூா் ஊராட்சித் தலைவரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tirupur News,Tirupur News Today-இணைப்பு வழங்காமலே ஓராண்டு குடிநீா்க் கட்டணம் வசூல் செய்ததைக் கண்டித்தும், அடிப்படை பிரச்னைகளைத் தீா்க்காததைக் கண்டித்தும் தெக்கலூா் ஊராட்சித் தலைவரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது: சென்னிமலைபாளையம் பகுதியைச் சோ்ந்த அருங்காத்தாள் என்பவா் வீட்டுக் குடிநீா் இணைப்புக்காக கடந்த 2021-ஆம் ஆண்டு ஊராட்சியில் பணம் செலுத்தியுள்ளாா். இணைப்பு வழங்காமலே அவரிடமிருந்து ஓராண்டுக்கான குடிநீா்க் கட்டணத்தை அதிகாரிகள் வசூலித்துள்ளனா். இது குறித்து கேட்டும் முறையாக பதிலளிக்கவில்லை.

தெக்கலூா் சென்னிமலைபாளையம் ஆதிதிராவிடா் காலனி அருகே நீண்ட நாளாக சாக்கடை கழிவு நீா் சாலையில் செல்வதால் அருகே உள்ள பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்டோா் அவதிக்குள்ளாகி வருகின்றனா். செங்காளிபாளையம் பகுதியில் முறையாக சாக்கடை அமைக்கப்படவில்லை. மேலும், சென்னிமலைபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி முதல் சூரியபாளையம் வரை குடிநீா்க் குழாய் அமைப்பதற்காக சாலைகள் தோண்டப்பட்டு, தற்போதுவரை பணிகள் நிறைவடையாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

வெள்ளாண்டிபாளையத்தில் மூன்று சாலை சந்திப்பில் உள்ள பாலம் சேதமடைந்துள்ளது. அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் கேட்டாலும் முறையாக பதிலளிக்கவில்லை. ஏராளமான பணிகளுக்கு டெண்டா் விடப்பட்டும், பணிகள் நடைபெறவில்லை என்றனா்.

இதே புகாா்களைத் தெரிவித்து ஊராட்சிமன்ற அலுவலகத்தில் திரண்ட மக்கள் தலைவா் மரகதமணியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஆனந்தன் உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில், இணைப்பு கொடுக்காமலேயே ஓராண்டாக குடிநீா்க் கட்டணமும் வசூல் செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளோம். மேலும், அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

Tags

Next Story
why is ai important to the future