அவினாசி - அத்திக்கடவு திட்டம் நிறைவேற தீர்த்தக்குட ஊர்வலம்

அவினாசி - அத்திக்கடவு திட்டம் நிறைவேற தீர்த்தக்குட ஊர்வலம்
X

திருமுருகன்பூண்டியில், அத்திக்கடவு திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி, தீர்த்தம் எடுத்து, மாட்டு வண்டியில் ஊர்வலம் வந்த பொதுமக்கள். 

அத்திக்கடவு திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி, திருமுருகன் பூண்டியில் தீர்த்தம் எடுத்து, மாட்டு வண்டியில் ஊர்வலம் வந்தனர்.

அவிநாசி அத்திக்கடவு திட்டம் விரைவில் நிறைவேற வேண்டியும், விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும், தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில், திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் சுவாமி கோவிலில் இருந்து, தீர்த்தம் எடுத்து, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் வரை, மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டியில், விவசாயிகள் ஊர்வலமாக வந்தனர்.

கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க அவிநாசி கிளை தலைவர் வேலுசாமி, அத்திக்கடவு அவிநாசி திட்ட போரட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் ஆகியோர், இந்த ஊர்வலத்தை கொடியைசத்து துவக்கி வைத்தனர். இதில், விவசாயிகள், பெண்கள் உட்பட பலரும் பங்கேற்றனர். பின், அத்திக்கடவு அவிநாசி திட்ட போராட்டக்குழுவினர் சார்பில், மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து சென்று, அவரவர் பகுதிகளில் வைத்து வழிபடும் நிகழ்வில் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!