அவினாசி அரசினர் மகளிர் விடுதி தற்காலிக மூடல்

அவினாசி அரசினர் மகளிர் விடுதி தற்காலிக மூடல்
X

தடுப்புச்சுவர் இடிந்த நிலையில், அவினாசி அரசினர் மகளிர் விடுதி.

மழை காரணமாக அவினாசி அரசினர் மகளிர் விடுதியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விடுதி தற்காலிகமாக மூடப்படடுள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவினாசியில் அரசினர் மகளிர் விடுதி உள்ளது. கோவை, திருச்சி, மதுரை, நீலகிரி போன்ற பிற மாவட்டங்களைச் சேர்ந்த 50 மாணவியர் அங்கு தங்கி, அவினாசி அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். இந்த விடுதி, நெடுஞ்சாலையையொட்டி உள்ள நிலையில், கடந்த மூன்று மாதத்துக்கு முன் பெய்த பெரும் மழையின் போது, சாலையில் பெருக்கெடுத்து வந்த வெள்ளத்தின் வேகம் தாங்காமல், தடுப்புச்சுவர் இடிந்தது.

அதன்பிறகு, ஒவ்வொரு முறை மழையின் போதும், சாலையில் பெருக்கெடுத்து வரும் வெள்ளம் விடுதிக்குள் புகுந்தது. இரு நாட்களுக்கு முன் பெய்த மழையில் கூட விடுதிக்குள் வெள்ளம் புகுந்தது. தற்போதைய சூழலில் விடுதியில், 15 மாணவியர் உள்ளனர். இன்னும் சில நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மாணவியரின் பாதுகாப்பு கருதி, விடுதியை தற்காலிகமாக மூட, ஆதி திராவிடர் நலத்துறையினர் முடிவெடுத்துள்ளனர். ஏற்கனவே, விடுதியில் தங்கியுள்ள மாணவியர், அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனவே, விடுதிக்குள் மழைநீர் புகாத வகையில், விடுதிக்கு முன் தடுப்புச்சுவர் எழுப்பி, மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture