டேக்வாண்டா போட்டி: மாணவர்கள் அசத்தல்

டேக்வாண்டா போட்டி: மாணவர்கள் அசத்தல்
X

மேற்கு மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுடன் ஆசிரியர்கள்.

மேற்கு மண்டல அளவிலான டேக்வாண்டா போட்டியில், அவினாசி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட மேற்கு மண்டல அளவிலான டேக்வாண்டா போட்டி, தெக்கலுாரில் உள்ள சக்தி சர்வசேத பள்ளியில் நடத்தப்பட்டது. இதில், அவினாசி அருகேயுள்ள திருமுருகன்பூண்டி, பெரியாயிபாளையம், திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும், 12ம் வகுப்பு மாணவர்கள் இலக்கியா, மாயக்கண்ணன், ஜோஸ்வா ஆகியோர் இரண்டாமிடம் பிடித்து, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

அதே போன்று, திருப்பூர் தடகள சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான தடகள போட்டியில், மாணவன் மாயக்கண்ணன், ஈட்டி எறிதல் போட்டியில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி தலைமையாசிரியர் குமரேசன், உதவி தலைமையாசிரியை சுமித்ரா, உடற்கல்வி ஆசிரியர்கள் சசிகுமார், சிவசங்கரி உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!