கோமாரி நோய் தடுப்பூசி முகாம் அதிகாரி ஆய்வு

கோமாரி நோய் தடுப்பூசி முகாம் அதிகாரி ஆய்வு
X

அவினாசி கிராமப்புறங்களில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும், கோமாரி நோய் தடுப்பூசி முகாமை கால்நடை பராமரிப்பு துறை அதிகாரி ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே உள்ள சின்னேரிபாளையம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட, வளையபாளையம் பகுதியில், கோமாரி நோய் தடுப்பூசி செலுத்து முகாம் நடந்தது. திருப்பூர் கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் பரிமளராஜ்குமார், முகாம் பணிகளை பார்வையிட்டார். ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். அவிநாசி கால்நடை மருத்துவர் இளவரசு, முகாம் பணிகளை மேற்கொண்டார். இந்த முகாம் மூன்று நாட்கள், இக்கிராமத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!