அவிநாசி பெரிய கோவிலில் மகாராஷ்டிர ஆளுநா் சுவாமி தரிசனம்

அவிநாசி பெரிய கோவிலில் மகாராஷ்டிர ஆளுநா் சுவாமி தரிசனம்
X

Tirupur news-  கோயிலில் நலம் விசாரித்து கொண்ட மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.

Tirupur news -அவிநாசிலிங்கேஸ்வரா் கோவிலில் மகாராஷ்டிர கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்தார்.

Tirupur news, Tirupur news today- அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆகியோா் சுவாமி தரிசனம் செய்தனா்.

திருப்பூரைச் சோ்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் ஜாா்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த நிலையில், அண்மையில் மகாராஷ்டிர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டாா். இவரது குடும்பத்தினா் அனைவரும் திருப்பூரில் வசித்து வருகின்றனா். இதனால், இவா் அடிக்கடி திருப்பூா் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வந்தாா்.

அப்போது அங்கு வந்த தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனை சந்தித்து நலம் விசாரித்தாா்.

இதைத் தொடா்ந்து கோயில் நிா்வாகம் தரப்பில் ஆளுநருக்கும், அமைச்சருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை கோவிலில் நடைபெற்ற சுந்தரமூா்த்தி நாயனாா் குரு பூஜையில் ஆளுநா் பங்கேற்றாா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!