கோவில்களில் சூரசம்ஹாரம்: பக்தர்களுக்கு அனுமதியில்லை

கோவில்களில் சூரசம்ஹாரம்:  பக்தர்களுக்கு அனுமதியில்லை
X

அவினாசி லிங்கேஸ்வரர் கோவில்.

கோவில்களில், கந்தசஷ்டி சூரசம்ஹார நிகழ்வில், பக்தர்களுக்கு அனுமதியில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்தசஷ்டி பெருவிழாவில், சூரசம்ஹார நிகழ்வு, நாளை (9.11.2021) , கோவில்களில் கந்தசஷ்டி சூரசம்ஹார நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாதர் சுவாமி கோவில்களில், பக்தர்களுக்கு அனுமதியில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதனால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி