மலிவு விலை சிமென்ட் விற்பனை அதிகரிப்பு

மலிவு விலை சிமென்ட் விற்பனை அதிகரிப்பு
X

கிராம ஊராட்சிகளின் முகப்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு .

அரசின் மூலம் வினியோகிக்கப்படும் மலிவு விலை சிமென்ட்க்கு, தேவை அதிகரித்துள்ளதால் அதன் விற்பனை அதிகரித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மூலம், மலிவு விலை சிமென்ட் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு மூட்டை, 216 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மலிவு விலை சிமென்ட் விற்பனையை அதிகப்படுத்த அரசு ஊக்குவித்து வருகிறது. இதையடுத்து, அனைத்து கிராம ஊராட்சி அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில், அதுதொடர்பான 'நோட்டீஸ்' ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தற்போது வெளிச்சந்தையில், ஒரு மூட்டை சிமென்ட், 400 ரூபாய் வரை விற்கப்படுவதால், மலிவு விலை சிமென்ட்டுக்கு, மக்கள் மத்தியில் தேவை அதிகரித்திருக்கிறது. சில கிராமப்புறங்களில், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில், வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது; இப்பணிக்கும், மலிவு விலை சிமென்ட் தான் பயன்படுத்தப்படுகிறது. வரும் நாட்களிலும் சிமென்ட் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப அரசாங்கத்தின் மூலம் தடையின்றி சிமென்ட் சப்ளை செய்யப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!