பல்கலை தரவரிசையில் இடம்பிடித்து அசத்திய அவிநாசி அரசு கல்லூரி மாணவ, மாணவியர்
அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 2021-22 க்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் அவிநாசி அரசு கல்லூரி சேர்ந்த ஆறு மாணவ, மாணவியர் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்தனர்.
அவிநாசியில் உள்ள அரசு கலை மற்றும் கலை அறிவியல் கல்லூரி, கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. பல்கலைக்கழகத்தின் மூலம், ஆண்டுதோறும் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியர் தரவரிசை பட்டியலில் இடம்பெறுகின்றனர். அந்த வகையில், அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் ஒருவரும், மாணவியர் ஐந்து பேர் என, மொத்தம் ஆறு பேர், தரவரிசை பட்டியலில் இடம்பிடித்து, கல்லூரிக்கு பெருமை தேடித் தந்துள்ளனர்.
தரவரிசை பட்டியலில் இடம்பெற்றோர்
சர்வதேச வணிகவியல் துறையில் உள்ள ஏழு இடங்களில் நான்கு இடங்களையும், வணிக நிர்வாகவியல் பிரிவின் இரண்டு இடங்களையும் பெற்று சாதனை படைத்தது, சர்வதேச வணிகவியல் துறையைச் சேர்ந்த ஜீவிதா தரவரிசையில் இரண்டாம் இடமும் ரச்சனா நான்காம் இடமும், ஜனரஞ்சனி ஐந்தாமிடமும், கிருஷ்ணவேணி ஏழாம் இடமும், வணிக நிர்வாகிகளை சேர்ந்த பிரின்ஸ் ராணி முதலிடமும், கருப்புசாமி இரண்டாம் இடமும் பெற்று சாதனை படைத்தனர்.
கல்லூரி முதல்வர் ஜோ நளதம், சர்வதேச வணிகவியல் துறை தலைவர் பாலமுருகன், வணிகவியல் துறை தலைவர் செல்வதரங்கினி, வேதியியல் துறை, இயற்பியல் துறை, கணினி அறிவியல் துறை ,பொருளியல் துறை, தமிழ் துறை, ஆங்கிலத்துறை தலைவர்களும், கல்லூரி ஆட்சி மன்ற குழுவினர், அனைத்துத் துறை பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் அனைவரும் தர வரிசையில் இடம்பிடித்த மாணவ, மாணவியருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu