ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
X

கும்பாபிஷேக விழாவில் கலசத்திற்கு தண்ணீர் ஊற்றப்பட்டது.

சேவூர் அருகே தண்டுக்காரம்பாளையம் அவிநாகிபுதூர் ஸ்ரீ சக்திவிநாயகர், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி சேவூர் அருகே தண்டுக்காரம்பாளையம் அவிநாகிபுதூர் ஸ்ரீ சக்திவிநாயகர், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

கும்பாபிஷேக விழாவையொட்டி, கடந்த, 18ம் தேதி புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. 19ம் தேதி கணபதி ஹோமம், முதல் கால வேள்வி, 20ம் தேதி 2ஆம், 3ஆம் கால வேள்வி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று காலை, 4ம் கால வேள்வி நடைபெற்றது.

காலை 9.30 மணிக்கு, ஸ்ரீ சக்திவிநாயகர், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகமும், இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாரதனைகள் நடைபெற்று, பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!