புலம்பெயர் தமிழர்களுக்கு சட்ட உதவி விழிப்புணர்வு

புலம்பெயர் தமிழர்களுக்கு சட்ட உதவி விழிப்புணர்வு
X

அவிநாசியில் இலங்கைத் தமிழர்களுக்கான இலவச சட்ட உதவி விழிப்புணர்வு முகாமில் மாவட்ட முதன்மை நீதிபதி நடராஜன் பேசினார். 

தாயகம் திரும்பிய இலங்கை தமிழர்களுக்கு, இலவச சட்ட உதவி முகாம் நடத்தப்பட்டது.

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் அவினாசி சட்டப்பணிகள் குழு சார்பில், புலம்பெயர் தமிழர்களுக்கான விழிப்புணர்வு முகாம், அவிநாசி கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது.

அவிநாசி சட்டப்பணிகள் குழு சார்பு நீதிபதி சுரேஷ்குமார் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் ஹேமலதா பேசினார். தலைமை குற்றவியல் நீதிபதி புகழேந்தி, அவினாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் விபிசி, மாவட்ட உரிமையியல் நீதிபதி அப்சல் பாத்திமா, டி.எஸ்.பி., பவுல்ராஜ், மூத்த வக்கீல்கள் சின்னசாமி, சுப்ரமணியம், ஈஸ்வரன் ஆகியோர் பேசினர்.

புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதியாக புஷ்பராஜ், கோரிக்கையை முன்வைத்தார். சட்டப்பணிகள் குழு உதவியுடன் பெறப்பட்ட முதல்வரின் காப்பீடு திட்ட சான்றிதழை முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் நடராஜன் வழங்கி, புலம்பெயர் தமிழர்களுக்கான சட்ட வாய்ப்பு குறித்து பேசினார். மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil