அவிநாசி அரசு கல்லூரியில் விளையாட்டு உடைகள் வழங்கும் விழா!

அவிநாசி அரசு கல்லூரியில் விளையாட்டு உடைகள் வழங்கும் விழா!
X

Tirupur news- அவிநாசியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு உடைகள் வழங்கப்பட்டது. 

Tirupur news- அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு உடைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

Tirupur news, Tirupur news today- அவிநாசியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டு உடைகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன் தலைவர் விவேகானந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விளையாட்டின் முக்கியத்துவம், இந்தியாவில் விளையாட்டின் தாக்கம், மற்றும் விளையாட்டின் மூலம் சாதனைகள் புரிந்தவர்களின் வெற்றிகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

மேலும், ரோட்டரி கிளப் செயலாளர் பிரபு அவர்கள், மாணவர்களுக்கு விளையாட்டின் பலன்களை விளக்கி, ரோட்டரி கிளப்பின் விளையாட்டு முன்னேற்றங்களில் ஆற்றிய பங்களிப்புகளை கூறினார். உடற்கல்வி இயக்குநர் திரு. பிரசன்ன குமார் பி. அவர்களும் விழாவை சிறப்பித்தார்.

வணிகவியல் சர்வதேச வணிகம் துறைத் தலைவர் செ. பாலமுருகன் அவர்கள் விளையாட்டின் வாழ்க்கை நெறிமுறைகள் மற்றும் அவற்றை எவ்வாறு கையாள வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார். கல்லூரி மாணவர்களும் விளையாட்டில் சாதனைகள் புரிய வேண்டும் எனவும் அறிவுறுத்தி, நன்றியுரையுடன் விழாவை நிறைவு செய்தார்.

மாணவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் உடற்திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வு நடைபெற்றது. மாணவர்களுக்கு விளையாட்டு சீருடைகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்வில் துணை செயலாளார் செந்தில்குமார், பொருளாளர் பரமசிவம், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!