நாளை மெகா மருத்துவ முகாம்: அவினாசி மக்களுக்கு அழைப்பு

நாளை மெகா மருத்துவ முகாம்: அவினாசி மக்களுக்கு அழைப்பு
X

பைல் படம்.

அவினாசி அருகேயுள்ள சேவூரில் நாளை (29ம் தேதி), அரசின் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

அவினாசி அருகேயுள்ள சேவூரில், நாளை (29ம் தேதி), அரசின் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. அவினாசி வட்டார அளவில், அவினாசி அருகேயுள்ள சேவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 'கலைஞரின் வருமுன் காப்போம்' திட்டத்தில், இலவச சிறப்பு மருத்துவ முகாம், நடத்தப்பட உள்ளது. காலை, 9:00 மணிக்கு துவங்கி மாலை, 4:00 மணிவரை முகாம் நடத்தப்பட உள்ளது.

இதில், பொது மருத்துவம், இருதய நோய் சிகிச்சை, பல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், கண் சிகிச்சை, புற்றுநோய், எலும்பு மற்றும் மூட்டு மருத்துவம், சித்த மருத்துவ சிகிச்சை, ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை என அனைத்து வகை மருத்துவ பரிசோதனைகளும் மேற்கெள்ளப்பட்டு, மருத்துவர்களால் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட உள்ளது. 'சேவூர் மற்றும் சுற்றுவட்டார மக்கள் முகாமில் பங்கேற்று பயன் பெற வேண்டும் என அவினாசி வட்டார சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!