பழுதான விளக்கு கம்பம் மாற்றியமைப்பு

பழுதான விளக்கு கம்பம் மாற்றியமைப்பு
X

சேதமடைந்த மின்கம்பம் 

திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில், பழுதான நிலையில் இருந்து, 165 மின் கம்பங்கள் மாற்றியமைக்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி பகுதியில், பிரதான சாலையோரங்கள், குடியிருப்பு பகுதி என பல இடங்களில் பொருத்தப்பட்டிருந்த மின் கம்பங்கள் பழுதாகி இருந்தன. சில கம்பங்கள் விழும் நிலையில் இருந்தன. அவற்றில், 165 மின் கம்பங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதோடு, மின் வினியோகம் சார்ந்த பணிகளுக்கு தேவையான தொழில்நுட்ப உபகரணங்களும் மாற்றியமைக்கப்பட்டன. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!