கொடி கம்பத்தில் சோலார் விளக்கு: கட்சியை வளர்க்க பாஜக புது டெக்னிக்?

கொடி கம்பத்தில் சோலார் விளக்கு: கட்சியை வளர்க்க பாஜக புது டெக்னிக்?
X

கனியாம்பூண்டி செந்தூர் கார்டன் பகுதியில், பாஜக கட்சி கொடி கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள சோலார் தெரு விளக்கு.

அவினாசி அருகே, கணியாம்பூண்டியில், பாஜக கொடி கம்பத்தில், சோலார் தெரு விளக்கு பொருத்தப்பட்டது.

அவிநாசி அருகேயுள்ள கணியாம்பூண்டி செந்துார் கார்டன் பகுதியில், தெரு விளக்கு இல்லாததால் ஏற்படும் திருட்டு அதிகரிப்பதாக, அப்பகுதி மக்கள் கூறியிருந்தனர். இதையடுத்து, அப்பகுதி பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில், கட்சி கொடி கம்பம் நடப்பட்டு, அதில், சோலார் மின் விளக்கு பொருத்தப்பட்டது.

பா.ஜ.க ஸ்தாபன தினத்தை முன்னிட்டு நடந்த இந்நிகழ்ச்சிக்கு, கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட அறிவுசார் பிரிவு தலைவர் செந்தில், தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. பாஜக தனது கட்சியை வளர்க்க, கொடிக்கம்பத்தில் சோலார் விளக்கு பொருத்தியுள்ளதோ என்று சிலர், இதை விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!