சட்டசபையில் எதிரொலித்த அவினாசி தத்தனுார் 'சிப்காட்' விவகாரம்

சட்டசபையில் எதிரொலித்த அவினாசி தத்தனுார் சிப்காட் விவகாரம்
X

சிப்காட்டுக்கு எதிராக நடந்த போராட்டம் - கோப்பு படம் 

தத்தனுார் ‘சிப்காட்’ விவகாரம், சட்டசபையில் எதிரொலித்தது. ‘துறை சார்ந்த விவாதத்தின் போது இதில் தெளிவு கிடைக்கும்’என, எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி, தத்தனுார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை மையப்படுத்தி, 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. கடந்த, ஆக., மாதமே இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்த நிலையில், அப்போதைய முதல்வர் பழனிசாமி, இத்திட்டம் கைவிடப்படுவதாக தெரிவித்தார். இருப்பினும், இவ்விவகாரம் மீண்டும் கிளம்பியுள்ளது.

இந்நிலையில், தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், அவிநாசி எம்.எல்.ஏ., தனபால், சட்டசபையில் இவ்விவகாரத்தை எழுப்பினார். ''மாநிலம் முழுவதும் தொழில வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், புதிய தொழில் பூங்காக்களை அரசு அமைக்க உள்ளதாக தெரிகிறது. எனது தொகுதிக்கு உட்பட்ட தத்தனுார் என்ற இடத்தில், 'சிப்காட்' தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அங்கு தொழில் பூங்கா அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே, அரசுக்கு, தொழிற்பூங்கா அமைக்கும் எண்ணம் இருந்தால், அதை கைவிட வேண்டும்,'' என தனபால் பேசியுள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!