அவினாசி சிறப்பு கொரோனா வார்டில் சித்தா சிகிச்சை துவக்கம்

அவினாசி சிறப்பு கொரோனா வார்டில் சித்தா சிகிச்சை துவக்கம்
X

 சித்தா கோவிட் சிகிச்சை மையம் 

அவினாசியில் உள்ள சிறப்பு கொரோனா வார்டில் சித்த மருத்துவத்துக்கென சிறப்பு வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவினாசியில், தொற்றுப்பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க, சுகாதாரத்துறை சார்பில், மகாராஜா கல்லுாரியில், 250 படுக்கை கொண்ட கொரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முதன்முறையாக, இக்கல்லுாரிக்கு அருகேயுள்ள பிருத்வி கல்லுாரியில், 100 படுக்கை கொண்ட சிறப்பு சித்தா சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இரண்டாம் அலையின் போது, இங்கு சித்தா வார்டு உருவாக்கப்படாத நிலையில், இம்முறை, சித்தா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டிருப்பதால் உள்ளூர் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!