சர்வதேச வணிக நெறிமுறைகள் குறித்த கருத்தரங்கு; அவிநாசியில், கல்லூரி மாணவர்கள் ஆர்வம்

சர்வதேச வணிக நெறிமுறைகள் குறித்த கருத்தரங்கு; அவிநாசியில், கல்லூரி மாணவர்கள் ஆர்வம்
X

அவிநாசி, கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த கருத்தரங்க நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்.

அவிநாசி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், "சர்வதேச வணிக நெறிமுறைகள்" குறித்த திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் நடந்தது.

சூலூர் ரோட்டரி சங்கம் மற்றும் அவிநாசி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சர்வதேச வணிகத்துறை இணைந்து, "சர்வதேச வணிக நெறிமுறைகள்" என்ற தலைப்பில், இன்று திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

கல்லூரி முதல்வர் ஜோ.நளதம் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக திருப்பூர், ஏற்றுமதி நிறுவன நிர்வாக இயக்குநர் தினேஷ்குமார் பழனிச்சாமி கலந்து கொண்டு, பல்வேறு விளக்கங்களை அளித்து, மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார்.

கருத்தரங்க நிகழ்ச்சியில், தினேஷ்குமார் பழனிச்சாமி பேசியதாவது,

சர்வதேச வணிகம் என்பது குறித்தும், இந்திய ஏற்றுமதியில் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் வகிக்கும் பங்கு, சர்வதேச வணிகம் செய்வதற்கு வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் பெறவேண்டிய அனுமதி, தரச் சான்றுகள் குறித்தும் விளக்கி பேசினார்.


மேலும் அவர் பேசுகையில், ஏற்றுமதி செய்யும்போது பின்பற்ற வேண்டிய சுங்கவரி கட்டணம் மற்றும் கடல் கடந்து செல்லத் தேவையான ஆவணங்கள், அவை தயாரிக்கும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். ஏற்றுமதி செய்கையில் அன்னிய செலாவணியினை கையாளும் முறைகள் குறித்தும், ரிசர்வ் வங்கி, பெரா,பெமா வகுத்துள்ள நெறிமுறைகள், ஏற்றுமதி செய்கையில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அதனை கையாளும் வழிமுறைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினார்.

ஏற்றுமதி வணிகத்தில் இந்தியாவின் தற்போதைய போக்கு, ஏற்றுமதி, இறக்குமதி செய்ய ஊக்கப்படுத்தும் அல்லது உதவி செய்யும் அரசு சார்ந்த நிறுவனங்கள், ஏற்றுமதி இறக்குமதியில் உள்ள பண பரிவர்த்தனைகளை கையாளும் நெறிமுறைகள் குறித்தும் மாணவர்களுக்கு, அவர் விளக்கினார்.

மாணவர்கள் சந்தேகங்களை, கேள்விகள் கேட்டு, பதில் தெரிந்து கொண்டனர். மாணவர்கள் கேட்ட கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு சிறப்பு விருந்தினர் பதிலளித்தார். மேலும், கூடுதலான விவரங்களையும் அவர் கூறி, தெளிவுபடுத்தினார்.

இறுதியாக பேசிய சூலூர் ரோட்டரி சங்க செயலாளர் மற்றும் சர்வதேச வணிகத் துறை தலைவர் பாலமுருகன் இது போன்ற திறன் மேம்பாட்டு கருத்தரங்குகளை முறையே பயன்படுத்தி, சர்வதேச வணிக நெறிமுறைகளையும் அதற்கு உதவும் அரசு நிறுவனங்களை பற்றியும் இக்கருத்தரங்கில் கலந்து பயன்பெற்ற மாணவர்களுக்கும் , முறையே தொகுத்து வழங்கிய சிறப்பு விருந்தினருக்கும் நன்றி கூறினார்.

சர்வதேச வணிகவியல் துறை மாணவர்களும், ஏனைய பேராசிரியர்களும் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு