அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கம்

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கம்
X

அவிநாசி அரசு கலை அறிவியல் கல்லூரியில்,  கம்ப்யூட்டர் அறிவியல் மன்ற துவக்க விழாவில் கல்லூரி முதல்வர் நளதம் பேசினார்.

‘சூழ்நிலைக்கேற்றவாறு, திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்’ என, நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கம்ப்யூட்டர் அறிவியல் துறை சார்பில், கம்ப்யூட்டர் அறிவியல் மன்ற துவக்க விழா நடைபெற்றது. துறைத்தலைவர் ஹேமலதா அனைவரையும் வரவேற்றார். இதில், 'வி5' சொல்யூஷன் தலைமை செயல் இயக்குனர் ஜெகதீசன் பங்கேற்று பேசினார்.

தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு, மாணவ, மாணவியர் தங்களின் தனித்திறனையும், தொழில் அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் நளதம் தலைமை வகித்தார். மாணவர்களின் ஒழுக்கம் பற்றிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவியர் முதல் ஆண்டு மாணவ, மாணவியருக்கு வரவேற்ப்பு அளித்தனர்.

Tags

Next Story
ai healthcare products