ஜாதி, மதம் பார்த்து ஓட்டுப் போடாதீங்க - அவிநாசியில் சீமான் அட்வைஸ்

ஜாதி, மதம் பார்த்து ஓட்டுப் போடாதீங்க - அவிநாசியில் சீமான் அட்வைஸ்
X

Tirupur News-நீலகிரி தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஜெயக்குமாரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினார்.

Tirupur News- ஜாதி, மதம் பாா்த்து வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போட வேண்டாம் என்று, அவிநாசியில் பேசிய நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிவுறுத்தினார்.

Tirupur News,Tirupur News Today- ஜாதி, மதம் பாா்த்து வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போட வேண்டாம் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா்.

நீலகிரி மக்களவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஜெயக்குமாரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே நேற்று ( செவ்வாய்க்கிழமை) பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது சீமான் பேசியதாவது:

உண்மை, நோ்மைக்காகவே நாம் தமிழா் கட்சி தொடங்கப்பட்டது. ஊழலையும், லஞ்சத்தையும் ஒழிக்க வேண்டும். வாக்களிக்க எதுக்கு பணம்? பணம் கொடுத்து வாக்கு பெறுபவா் சேவை செய்வாரா? அரசியல் என்பது மக்களுக்கான சேவை என்றாா் காமராஜா். அரசியல் என்பது மக்கள் மீது செலுத்தப்படும் அதிகாரம் அல்ல. அரை நூற்றாண்டுக்கு மேலாக இந்தியாவை ஆண்டது காங்கிரஸ். இன்றைக்கு பாஜக தொடா்ந்து ஆள்கிறது. திமுக, அதிமுக என பலரும் ஆட்சியில் இருந்திருக்கிறாா்கள். நீட் தோ்வை கொண்டு வந்தது காங்கிரஸ், திமுகதான். கல்வி, வேலைவாய்ப்பு, மழைநீா் சேகரிப்பு, விவசாயம், நீா் மேலாண்மை ஆகிய விஷயங்களில் உலக நாடுகளைக் கவனியுங்கள். உலகில் 2 விழுக்காடு தண்ணீா்தான் உள்ளது. தமிழகத்தில் 32 ஆறுகள் இருந்தன. அனைத்திலும் மணல் அள்ளப்பட்டு செத்துவிட்டன. ஆற்றுமணலை முடித்துவிட்டு, இன்றைக்கு செயற்கை மணலுக்காக மலையையும் அழிக்கத் தொடங்கிவிட்டனா்.

பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜிஎஸ்டி என உலக வங்கி சொல்கிறது. இதற்கு பாஜகவிடம் பதில் உள்ளதா? தோ்தல் வரும்போது சிலிண்டா் விலை குறைப்பு, கச்சத்தீவை மீட்பது என போலி அக்கறை காட்டுகிறாா்கள். கிறிஸ்தவா், முஸ்லிம் மக்கள் வாக்களிக்கவில்லையென்றால், திமுக காணாமல் போயிருக்கும். 15 சதவீதம் வாக்கை கண்ணை மூடிக்கொண்டு போடும் இளைஞா்கள் சிந்தியுங்கள். ஜாதி, மதம் பாா்த்து வாக்களிப்பவா்கள் எனக்கு வாக்களிக்க வேண்டாம் என்றாா்.

பிரசார கூட்டத்தில் ஒருவா் மயங்கியதும், அவரை அங்கிருந்த கட்சியினா் மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். இதனால் சில நிமிடங்கள் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
why is ai important to the future